உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு
உத்தரப் பிரதேசத்தில் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் சிலை
(கோப்புப் படம்)

அம்பேத்கர் சிலை
(கோப்புப் படம்)
உத்தரப் பிரதேசத்தில் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அமோதா கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு ஒரு பூங்காவில் இந்த சம்பவம் நடந்தது. தகவல் பரவியவுடன், உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்தில் கூடியதால் பரபரப்பு நிலவியது.
சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்து, காவல்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க பூங்காவைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குக்லி காவல் நிலைய கௌரவ் சிங் கூறினார்.
சி.சி.டி.வி காட்சிகள் மூலம் மர்மநபர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றம் செய்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் சக்கோதர் கிராமத்திலும் இதேபோன்று அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...