
காந்திநகர்: ஏர் இந்தியா விமானம், ஜூன் 12ஆம் தேதி பகல் 1.30 மணியளவில், குடியிருப்புகளுக்கு இடையே விழுந்து விபத்துக்குள்ளான போது, அங்கு பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அதில் ஒருவராக இருந்தவர்தான் தொழிலதிபர் ராஜு. சம்பவம் நடந்த போது, மிக அருகிலேயே இருந்த அவர், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட தனது நண்பர்கள் குழுவுடன் சென்றுள்ளார்.
முதலில், கடுமையான வெப்பத்தால் அங்கு தங்களால் நிற்கக் கூட முடியவில்லை. பிறகு, தீயணைப்புத் துறையினர் வந்து தீயைக் கட்டுப்படுத்திய நிலையில்தான் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற உதவி செய்தோம்.
மாலை 4 மணிக்கெல்லாம், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், அங்கிருந்த முக்கியமான ஆவணங்கள் பொருள்களை மீட்கும் பணியைத் தொடங்கினோம்.
அங்கிருந்த கைப்பைகளை சேகரித்தோம். அதிலிருந்து முக்கிய ஆவணங்கள், பாஸ்போர்ட்டுகள், பலியானவர்கள் அணிந்திருந்த வளையல் உள்ளிட்ட தங்க நகைகள், அனைத்தையும் சேகரித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். இதுவரை 70 சவரன் தங்க நகைகளை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும், அவை, பலியானவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்திருப்பதாகக் கூறினார்கள்.
இதையும் படிக்க.. போபாலின் 90 டிகிரி மேம்பாலத்துக்கு டஃப் கொடுக்கும் ஆந்திர மேம்பாலம் இதுதானா?
ஒருவர் பையிலிருந்து பகவத் கீதையும் கண்டெடுத்தோம். பாஸ்போர்டுகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இரவு 9 மணி வரை அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும், இதுபோன்றதொரு விபத்தை தான் இதுவரை பார்த்ததில்லை என்றும், ஏற்கனவே 2008ல் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களின்போதும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அனுபவம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.