மகாராஷ்டிர பள்ளிகளில் 3வது மொழியாக ஹிந்தி கற்பிப்பது வரவேற்கத்தக்கது: அமைச்சர்

மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக வேறு இந்திய மொழியைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.
Hindi to be taught as 3rd language
பள்ளி மாணவர்கள்
Published on
Updated on
1 min read

பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹந்தி கற்பிக்கப்படும் என்ற அரசின் முடிவை மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா பூஸ் வரவேற்பு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படும் என்ற அரசின் முடிவை தான் ஆதரிப்பதாகவும், அதேசமயம் பாடத்திட்டத்தின்படி மராத்தியைக் கற்பிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

மகாராஷ்டிர அரசு செவ்வாயன்று பிறப்பித்த உத்தரவில், மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தி பொதுவாக மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும்.

திருத்தப்பட்ட அரசுத் தீர்மானத்தில் ஹிந்தி கட்டாயமாக இருப்பதற்குப் பதிலாக பொதுவாக மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும், ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இந்திய தவிர வேறு எந்த இந்திய மொழியையும் படிக்க விருப்பம் தெரிவித்தால், தேர்விலிருந்து விலகுவதற்கான விருப்பத்தையும் வழங்கியது.

ஹிந்தி கற்றுக்கொள்வது மாணவர்களுக்குப் பயனளிக்கும். ஹிந்தி கற்பது முக்கியம், ஏனெனில் அது பொது வாழ்வில் தொடர்புக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

12-ம் வகுப்புக்குப் பிறகு, மத்திய அரசு மூன்றாவது மொழியிலும் மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது. அத்தகைய கொள்கையில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பின்தங்கக்கூடாது. எனவே மும்மொழிக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே, ஹிந்தி கற்றுக்கொள்வது நீண்ட காலத்திற்கு மாணவர்களுக்குப் பயனளிக்கும்.

மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு முதல் ஹிந்தி ஏற்கெனவே கற்பிக்கப்பட்டு வருவதாகவும், மராத்தி வழிப் பள்ளிகள் அல்லாத பிற பள்ளிகளில் மராத்தி கட்டாயமாகவும், ஆங்கிலம் மூன்றாம் மொழியாகவும் கற்பிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக வேறு இந்திய மொழியைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.

மாணவர்கள் வேறு எந்த மொழியையும் தேர்வுசெய்தாலும், அதற்கான ஏற்பாடுகள் செய்து தருவோம். குறைவான மாணவர்கள் ஒரு மொழியை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அந்த மொழி ஆன்லைனில் அல்லது கிடைக்கக்கூடிய பிற ஊடகங்கள் மூலம் கற்பிக்கப்படும்.

மூன்றாவது மொழியைத் தேர்ந்தெடுப்பது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் விருப்பம். இது மாணவர்களின் தகுதியை மேம்படுத்த உதவும் என்று அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com