
பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் மக்களின் பயன்பாட்டிற்கானவை அல்ல என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகளை பொதுப் பயன்பாட்டிற்கானவை என வகைப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து பெட்ரோலிய வர்த்தகர்கள் மற்றும் பல பெட்ரோல் நிலையங்களின் உரிமையாளர்களின் பிரதிநிதியான ஒரு அமைப்பு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில், தங்களது பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் வாடிக்கையாளர்களின் அவசர தேவைக்கானவை என்றும் அவற்றை பொதுப் பயன்பாட்டிற்கு அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி எஸ் டயஸ், அவர்களது வாதத்தை ஏற்றுக்கொண்டு வழங்கிய இடைக்கால உத்தரவில், “மனுதாரர்களின் நிறுவனங்களிலுள்ள கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்த வலியுறுத்த வேண்டாம்” என மாநில அரசுக்கும், திருவனந்தபுரம் மாநகராட்சிக்கும் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரனை ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மத்தியஸ்தம் செய்தது அமெரிக்கா! பாக்., தளபதியை சந்தித்தப் பின் டிரம்ப் பேட்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.