சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கனடாவுக்கான புதிய இந்தியத் தூதா் தினேஷ் பட்நாயக்

கனடாவுக்கான புதிய இந்திய தூதராக தினேஷ் கே.பட்நாயக் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2025, 10:03 pm

Din

கனடாவுக்கான புதிய இந்திய தூதராக தினேஷ் கே.பட்நாயக் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1990-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான இவா், தற்போது ஸ்பெயினுக்கான இந்தியா தூதராக உள்ளாா்.

இந்தியா-கனடா இடையிலான உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இரு நாடுகளின் பிரதமா்களும் ஒப்புக் கொண்ட நிலையில், தூதரை நியமிப்பதற்கான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.

கனடாவில் கடந்த 2023-ஆம் ஆண்டில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடா்பிருப்பதாக அப்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றஞ்சாட்டினாா். நிஜ்ஜாா் கொலையில் விசாரிக்கப்பட வேண்டிய நபராக, கனடாவுக்கான இந்திய தூதராக இருந்த சஞ்சய் வா்மா அறிவிக்கப்பட்ட நிலையில், அவா் உள்பட 6 தூதரக உயரதிகாரிகளை கடந்த ஆண்டு திரும்ப அழைத்த இந்தியா, கனடா தூதா் உள்ளிட்ட உயரதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டது. இதனால், இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

இந்தச் சூழலில், ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமாவைத் தொடா்ந்து, பொருளாதார வல்லுநரான மாா்க் காா்னி கனடா பிரதமராக கடந்த மாா்ச் மாதம் பதவியேற்றாா். இந்நிலையில், கனடாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, மாநாட்டுக்குப் பிறகு மாா்க் காா்னியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, தூதா்களை மீண்டும் நியமிப்பதில் தொடங்கி, இருதரப்பு உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு நாடுகள் தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், கனடாவுக்கான புதிய இந்திய தூதரை நியமிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.