
கர்நாடகத்தில் ஐடி உள்பட சில துறைகளில் வேலை நேரத்தை 10 முதல் 12 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின்படி அதிகபட்ச வேலை நேரம் 9 மணி நேரமாக உள்ளது. கூடுதல் வேலை நேரம் சேர்த்து 10 மணி நேரம் வரை வேலை செய்யலாம்.
இதனை தற்போது 10 முதல் 12 மணி நேரமாக மாற்ற கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது. கூடுதல் வேலை நேரம்(overtime) சேர்த்து அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை வேலைஅல்லது வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என நிர்ணயிக்கப்படுகிறது. ஐடி உள்ளிட்ட ஒரு சில குறிப்பிட்ட துறை ஊழியர்களுக்கு இதனைக் கொண்டுவர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வணிக செயல்பாட்டு நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு அந்த மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நேற்று(புதன்கிழமை) மாநில தொழிலாளர்கள் துறை அமைச்சகம், அதிகாரிகள் மற்றும் தொழில் துறை நிறுவனங்களுடன் இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொண்டது.
மாநில அரசின் இந்த முடிவு தொழிலாளர்களின் நலனைப் பாதிக்கிறது என்றும் வேலை ஆள்களைக் குறைக்கும் நடவடிக்கை, இதனால் 3ல் ஒரு பங்கினருக்கு வேலை பறிபோகும் வாய்ப்பு உள்ளது என்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
முன்னதாக ஆந்திரத்திலும் வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துபை உள்ளிட்ட நாடுகளில் வேலை நாள்கள் குறைக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் வேலை நேரம் அதிகரிக்கப்படுவது பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிக்க | மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.