‘ஆங்கிலம் பேசும் இந்தியா்கள் வெட்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை’ - அமித் ஷா

தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் அமித் ஷா பேசியது பற்றி...
Those who speak English will soon feel ashamed: Amit shah
அமைச்சர் அமித் ஷாANI
Published on
Updated on
1 min read

இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் விரைவில் வரும் என அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

"நான் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த நாட்டில் ஒரு சமூகம், ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் விரைவில் உருவாகும். அவர்கள்தான் இந்த நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறார்கள்.

இந்திய நாட்டின் மொழிகள் நம்முடைய கலாசாரத்தின் ரத்தினங்கள். மொழிகள் இல்லாமல் நாம் உண்மையான இந்தியர்கள் அல்ல.

ஒரு அந்நிய நாட்டு மொழியில் நமது வரலாறு, கலாசாரம், மதத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. முழுமையற்ற அந்நிய நாட்டு மொழிகளால் ஒரு முழுமையான இந்தியாவை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

போர் எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்திய சமூகம் இந்தப் போரில் நிச்சயம் வெற்றி பெறும் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நமது மொழிகளில் பெருமையுடன் நாம் இந்த நாட்டை வழிநடத்துவோம், சித்தாந்தப்படுத்துவோம், ஆராய்ச்சி செய்வோம், முடிவுகளை எடுப்போம், இந்த உலகை ஆள்வோம். இதுபற்றி யாரும் சந்தேகப்படத் தேவையில்லை.

2047ல் உலக வளர்ச்சியின் உச்சத்தில் இந்தியா இருப்பதற்கு நமது மொழிகள் பெரிதும் பங்களிக்கும்" என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com