தீர்வு காண்பதில் அல்ல, வெற்று முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார் மோடி: ராகுல்

மோடி எந்த தீர்வுகளையும் வழங்கவில்லை..
Rahul Gandhi
ராகுல் காந்தி - பிரதமர் மோடிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளாரே தவிர தீர்வு காண்பதில் அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

'மேக் இன் இந்தியா' திட்டம் இந்தியாவில் அதிகளவிலான தொழிற்சாலைகளை பெருகும் என உறுதியளித்தது. அப்படியானால் உற்பத்தி ஏன் குறைந்துள்ளது? இளைஞர்களின் வேலையின்மை ஏன் அதிகரித்துள்ளது? சீனாவில் இறக்குமதிகள் ஏன் இரட்டிப்பாகியுள்ளன? மோடி தீர்வுகளில் அல்ல, முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பொருளாதாரத்தில் 2014 முதல் உற்பத்தி 14 சதவீதமாகக் குறைந்துள்ளது. மோடியிடம் புதிதாக எந்த யோசனைகளும் இல்லை. அரசு இறக்குமதியில்தான் ஆர்வம் காட்டுகிறது. உள்நாட்டு நிறுவனங்களை பெருக்குவதில் அல்ல. இறுக்குமதி அதிகரிப்பால் சீனா லாபம் அடைகிறது

நேர்மையான சீர்திருத்தங்கள் மற்றும் நிதி ஆதரவு மூலம் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடிப்படை மாற்றம் இந்தியாவுக்குத் தேவை. மற்றவர்களுக்குச் சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும். நாம் கட்டமைக்கவில்லை என்றால், வாங்குபவர்களிடமிருந்து வாங்குவதைத் தொடர்வோம். நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தி தில்லியில் நேரு பிளேஸில் மொபைல் பழுதுபார்க்கும் ஒருவரை சந்தித்து, அவரது உரையாடலின் விடியோவையும் இணைந்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்படுவதற்கும், இந்தியாவில் ஏற்றுமதி செய்வதற்கும் இடையே வேறுபாடு உள்ளது. உண்மை அப்பட்டமானது. ஒன்றுகூடி இறக்குமதி செய்கிறோமே தவிர, எதையும் உருவாக்குவதில்லை.

சீனா லாபம் ஈட்டுகிறது. சீனா உலகின் மின்னணு சந்தை போன்று வேறு எங்கும் மின்னணு சந்தை இல்லை என்றளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் இறக்குமதி செய்கிறோமே தவிர வேறேதும் செய்வதில்லை. ஐபோன்களை உருவாக்கத் தொடங்குகள், இது முற்றிலும் மாறுபட்ட பந்து விளையாட்டு என்று அவர் விடியோவில் கூறினார்.

உடல் உழைப்பை நாம் மதிக்கத் தொடங்கும் வரை, தெருக்களில் நின்று மணிக்கணக்காக வேலையும், வியாபாரமும் செய்து வரும் மனிதர்களை நாம் மதிக்க மாட்டோம்.

மேலும் இதனிடையே 'சாதி' என்ற கருத்து உள்ளது. இதை நாம் வெளிப்படையாக கூற வேண்டும். இந்திய சமூகம் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறது, இந்திய சமூகம் எவ்வாறு மரியாதையை பகிர்ந்து கொள்கிறது என்பதை நாம் சரியாக புரிந்து வேண்டும். நாடு தழுவிய சாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பிரச்னையை காங்கிரஸ் தான் எழுப்பியது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com