இது 96 காதல் அல்ல, 93 காதல்! முதியவரின் காதலும் நகைக் கடைக்காரரின் மனிதாபிமானமும்!

இது 96 காதல் அல்ல, 93 காதல்! முதியவரின் காதலும் நகைக் கடைக்காரரின் மனிதாபிமானமும்!
Old couple
முதிய தம்பதிFrom video
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள நகைக்கடை ஒன்றில், 93 வயது முதியவர் தனது மனைவிக்கு மாங்கல்யம் வாங்க வந்த போது, நெகிழ்ந்துபோன நகைக்கடைக்காரர் ரூ.20 மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மாங்கல்யம் வழங்கிய விடியோ வைரலாகியிருக்கிறது.

வயதான முதிய தம்பதியான நிவ்ருத்தி ஷிண்டே - சாந்தாபாய், இரண்டு நாள்களுக்கு முன்பு, ஒரு நகைக்கடைக்குள் சென்றுள்ளனர். முதலில் இவரும் ஏதே உதவி கேட்கத்தான் வந்திருப்பார்கள் என்று நனைக்கடை ஊழியர்கள் கருதினார்கள்.

ஆனால், நிவ்ருத்தியோ, தனது மனைவிக்கு மாங்கல்யம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பத்தை நகைக்கடைக்காரர்களிடம் கூறியிருக்கிறார். இந்த தள்ளாத வயதில், தனது மனைவிக்கு தங்க மாங்கல்யம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசையோடு வந்த முதியவரின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட நகைக்கடை உரிமையாளரும், அவர்கள் தேர்வு செய்த மாங்கல்யத்துக்கு வெறும் ரூ.20 மட்டும் ஒரு சம்பிரதாயத்துக்காகப் பெற்றுக்கொண்டு நகையைக் கொடுத்துள்ளார்.

இது குறித்து நகைக்கடைக்காரர் கூறுகையில், வயதான தம்பதி நகைக்கடைக்குள் வந்தனர். 93 வயது நிவ்ருத்தி தன் கையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த ரூ.1,120 மட்டும் இருந்தது. இவர்களது ஒற்றுமையும் காதலும் எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தேர்வு செய்த மாங்கல்யத்தை வெறும் 20 ரூபாய் பெற்றுக்கொண்ட கொடுத்தோம். அனைவரும் அவர்களிடம் ஆசி பெற்றுக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக எனது மனைவியிடம் கண்டிப்பாக ஒரு தங்க நகையாவது வாங்கித் தருவேன் என்று கூறிவந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. இறுதியாக ஆயிரம் ரூபாய் சேர்த்துக்கொண்டு நகைக்கடைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், அவர்கள் எங்களுக்கு பணமே பெற்றுக்கொள்ளாமல் மாங்கல்யத்தைக் கொடுத்துவிட்டனர். இறுதியாக நான் சொன்னபடி என் மனைவி கழுத்தில் தங்க மாங்கல்யம் அணிந்துகொண்டதைப் பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

அவர்களது மகிழ்ச்சியும், தள்ளாத வயதில் இருவருக்கும் இடையிலான அன்பும் மிக அழகாக விடியோவில் பதிவாக, அது சமூக வலைத்தளத்திலும் வைரலாகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com