தில்லியில் ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்க வாய்ப்பு!

தில்லியில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட ஓரிரு நாள்களில் முன்னதாகவே தொடங்க வாய்ப்பு..
Monsoon likely to arrive in Delhi
தில்லியில் பருவமழை
Published on
Updated on
1 min read

தில்லியில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட ஓரிரு நாள்களில் முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளம், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், தில்லியில் ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்கும் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது,

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர் மற்றும் தில்லியின் பல பகுதிகளில் இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும். தலைநகரில் பெரும்பாலும் நாளை பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுவாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 30 ஆம் தேதிக்குள் தில்லியை வந்தடைகிறது. இருப்பினும், ஜூன் 24 ஆம் தேதி முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 2013ல் ஜூன் 16 ஆம் தேதி தலைநகரில் பருவமழை பெய்தது. கடந்தாண்டு ஜூன் 28-ம், 2023 ஜூன் 25-ம், 2022 ஜூன் 30ம், 2021 ஜூலை 13ல் பருவமழை தில்லியை அடைந்தது.

அடுத்த சில நாள்களுக்கு வானம் மேகமூட்டமாகவும், லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல் எதிர்பார்க்கப்படும் என்றும் ஐஎம்டி கணித்துள்ளது.

தில்லியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இதுவரை, தில்லியில் 2.4 மி.மீட்டருக்கும் அதிகமான மழையுடன் மூன்று மழை நாள்கள் பதிவாகியுள்ளன.

தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் தில்லியில் வழக்கமான மழைப்பொழிவு சுமார் 43.3 மி.மீ. ஆகும். இருப்பினும் இதுவரை 89 மிமீ மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ளது.

தலைநகரில் கடந்த ஆண்டு ஜூன் 28ல் பருவமழை தொங்கியது, ஜூன் மாதத்தில் 74.1 மிமீ வழக்கமான மழையை விட 243.4 மிமீ அதிகமாகப் பெய்தது. சஃப்தர்ஜங்கில் மட்டும் 228.1 மிமீ மழையைப் பதிவு செய்துள்ளதாக ஐஎம்டி தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com