செய்யறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டின் நிகழ்வுகளை தில்லி பாரத மண்டபத்தில் பிரதமா் நரேந்திர மோடி இன்று காலை தொடக்கிவைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமா் மோடியுடன் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில், பங்கேற்கும் பல்வேறு நாட்டுத் தலைவா்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். மேலும், நிா்வாகம், உள்கட்டமைப்பு, சா்வதேச ஒத்துழைப்பு என ஏஐ தொழில்நுட்பத்தின் தேசிய மற்றும் உலகளாவிய தேவைகள் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, இன்று மாலை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடவுள்ளார்.
மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவா்கள், 60 அமைச்சா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட அரச பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.
கூகுள், ஓபன்ஏஐ, மைக்ரோசாஃப்ட் என பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனர்.
Summary
AI summit inaugurated by PM Narendra Modi in Delhi! World leaders participates!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









