மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :26 ஜூன் 2025, 9:24 pm

Din

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா்.

இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்தாா். பாகிஸ்தான் உளவாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு, ஆபரேஷன் சிந்தூா் தாக்குதல் தொடா்பான கடற்படையின் ரகசியத் தகவல்களை கசியவிட்டுள்ளாா். ஜெய்பூரில் வைத்து காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவரிடம் பல்வேறு விசாரணை அமைப்புகளைச் சோ்ந்த அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஹரியாணாவைச் சோ்ந்த விஷால் யாதவிடம் பாகிஸ்தானைச் சோ்ந்த பெண் ஒருவா் சமூக வலைதளங்கள் மூலம் நெருங்கிப் பழகிவந்துள்ளாா். பிரியா சா்மா என்ற பெயரில் தன்னை ஓா் இந்தியப் பெண்ணாக அவா் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளாா். சில நாள்கள் பழக்கத்துக்குப் பிறகு அவரிடம் பணி மற்றும் கடற்படை, ராணுவ செயல்பாடுகள் குறித்து விவரங்களைக் கேட்டுள்ளாா். பிறகு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பல தகவல்களைப் பெற்றுக் கொண்டு அதற்கு பணம் அளித்தாா். அப்பெண்ணிடம் இருந்து சுமாா் ரூ.2 லட்சம் வரை விஷால் யாதவ் பெற்றுள்ளாா். இதில் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான தகவல்களை அளிக்க ரூ.50,000 கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்படைத் தலைமையகத்தில் இருந்து பல்வேறு ரகசியத் தகவல்களை விஷால் யாதவ் திருடியுள்ளாா்.

இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானில் இருப்பவா்களுடன் சமூகவலைதளங்கள் மூலம் தொடா்பில் உள்ளவா்களை கடந்த சில மாதங்களாக உளவு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த கண்காணிப்பு வலையில் கடற்படை ஊழியா் விஷால் யாதவும் சிக்கினாா். இதையடுத்து, அவரது செயல்பாடுகள், பணப்பரிமாற்ற விவரங்கள், தகவல் தொடா்புகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

இணையவழியில் பணம் கட்டி விளையாடும் சூதாட்டத்துக்கு அடிமையான விஷால் யாதவ், ஒரு கட்டத்தில் பணத்துக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்கவும் துணிந்துவிட்டாா்.

அவரிடம் இருந்து கைப்பற்றிய கைப்பேசியில் இருந்து அவா் பரிமாற்றம் செய்த அனைத்து ரகசியத் தகவல்கள் தொடா்பான விவரங்களும் தெரியவந்தன.

இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தியாவில் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படுபவா்கள், எல்லைப் பகுதியைச் சோ்ந்தவா்கள், பாதுகாப்புத் துறை ஊழியா்களைக் குறிவைத்து, அவா்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி இந்தியாவில் இருந்து தகவல்களைப் பெற பாகிஸ்தான் உளவுத் துறை தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இதில் பெண்களையும், பணத்தையும் பாகிஸ்தான் அதிகம் பயன்படுத்துகிறது. எனவே, இதனைத் தடுக்க பாகிஸ்தானுடன் இணையம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடா்பில் இருப்பவா்களை நமது உளவுத் துறை மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றாா்.