அகமதாபாத் விமான விபத்து: கடைசி உடலும் அடையாளம் காணப்பட்டது

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவரின் கடைசி உடலும் அடையாளம் காணப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
DNA test identifies last victim of Ahmedabad plane crash; death toll stands at 260
அகமதாபாத் விமான விபத்து
Published on
Updated on
1 min read

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவரின் கடைசி உடலும் அடையாளம் காணப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவரின் கடைசி உடலின் டிஎன்ஏ பொருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் விமான விபத்தில் காயமடைந்த மூன்று பேர் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமான விபத்தில் பலியானவர்களின் 260 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக மருத்துவ அதிகாரிகள் இறப்பு எண்ணிக்கையை 270 ஆகக் கணக்கிட்டிருந்தனர். குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

இதில், விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர, மீதமுள்ள 241 பயணிகள் உள்பட 260 பேர் பலியாகினர். பெரும்பாலான உடல்கல் தீயில் எரிந்து நாசமாகியிருக்கும் நிலையில், உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் சடலங்கலை உறுதி செய்யும் பணி நடைபெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

summary

More than two weeks after the Ahmedabad plane crash, the DNA test has ascertained the identity of the last victim, and the death toll in the tragedy now stands at 260, officials said on Saturday.

இதையும் படிக்க... செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com