
உஸ்செஸ் கோப்பையை வென்ற பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், UzChess மாஸ்டர்ஸ் கோப்பை 2025-இல் வென்றதற்கும், கிளாசிக்கல் வீரர் தரவரிசையில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்ததற்கும், லைவ் ரேட்டிங் மதிப்பீட்டில் உலகின் நம்பர் 4 வீரராக உயர்ந்ததற்கும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்.
வெற்றிப் பாதையில் தொடரும் வாகையரான அவரது கரங்களில் செக்மேட் செய்யமுடியாத எதிர்காலம் உள்ளது! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உஸ்செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் 2025 தொடரின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக்கை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக்கை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
CM Stalin congratulates Praggnanandhaa on winning the UzChess Trophy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.