
ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே சிதைந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே மைனர் பெண் மற்றும் இளைஞனின் பகுதியளவு சிதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், உடல் சிதைவின் அளவைப் பார்க்கும்போது, இருவரும் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்ததாகத் தெரிகிறது.
உடல்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. ரவிக்குமார் (18) என்ற நபரின் பாகிஸ்தானிய சிம் கார்டு மற்றும் அடையாள அட்டையும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது.
சர்வதேச எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் சுமார் 10-12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாதேவாலா பகுதியில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
உடல்கள் ராம்கர் சமூக சுகாதார மைய பிணவறைக்கு அனுப்பப்பட்டன. உடற்கூராய்வுக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்.
சிறுமியும் இளைஞரும் இந்திய குடிமக்களா அல்லது பாகிஸ்தானிய குடிமக்களா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விஷயம் மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Bodies of minor girl, youth found near Indo-Pak border in Rajasthan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.