உத்தரகண்டில் மேக வெடிப்பு: 3 பேர் பலி, 6 பேர் மாயம்

உத்தரகண்டில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
cloudburst hits Uttarakhand
பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணியில் மீட்புக்குழுவினர்.
Published on
Updated on
1 min read

உத்தரகண்டில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், பர்கோட்-யமுனோத்ரி சாலையில் உள்ள பாலிகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டது. அப்போது ஹோட்டல் கட்டுமான தளத்தில் இருந்த 20 தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் பலியானார்கள்.

மீட்புக் குழுக்கள் இதுவரை 11 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ளது. மற்ற ஆறு பேர் இன்னும் காணவில்லை. மாநில பேரிடர் மீட்புப் படை இடிபாடுகளில் இருந்து ஒரு உடலை மீட்ட நிலையில் மேலும் 18 கிலோமீட்டர் தொலைவில் இரண்டு உடல்களை போலீஸார் மீட்டனர்.

யமுனோத்ரி நெடுஞ்சாலையின் 10 மீட்டர் நீளம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டு, புனித யாத்திரைத் தலத்திற்கான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சார் தாம் யாத்திரையை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.

கர்வால் மண்டல ஆணையர் வினய் சங்கர் பாண்டே இதனை உறுதிப்படுத்தினார். "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹரித்வார், ரிஷிகேஷ், ஸ்ரீநகர், ருத்ரபிரயாக், சோன்பிரயாக் மற்றும் விகாஸ்நகரில் யாத்ரீகர்களைத் தடுக்க காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்" என்று அவர் கூறினார்.

உத்தரகண்டின் மலை மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் இடைவிடாத, கனமழை பெய்து வருகிறது, இதனால் முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் ஆபத்தான அளவில் உயர்ந்துள்ளது. பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் பகுதிகள் வழியாகச் செல்லும் மந்தாகினி மற்றும் அலக்நந்தா ஆறுகள் தற்போது அபாய அளவைத் தாண்டி பாய்கின்றன.

எனவே, ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Summary

The State Disaster Response Force (SDRF) recovered one body from the debris, and the police retrieved two bodies at a distance of 18 kilometres.

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com