
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் உடல்நலன் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானோர் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் (ஐடி) உடல்நலன் குறித்து 300-க்கும் மேற்பட்டோரிடம் ஹைதராபாத் பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் உட்படுத்தப்பட்டோரில் 84 சதவிகிதத்தினருக்கு மெட்டபாலிக் டிஸ்பங்சன் அசோசியேட்டடு பேட்டி லிவர் டிசீஸ் (MAFLD - கல்லீரலில் கொழுப்பு சேரும் நோய்) இருப்பது தெரியவந்தது.
கல்லீரலின் திசுக்களில் 5 முதல் 6 சதவிகிதத்துக்கும் அதிகமான கொழுப்பு சேமிக்கப்படுவதால், இந்த பிரச்னை ஏற்படுகிறது.
ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதற்கு காரணம் நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பது, போதுமான தூக்கமின்மை, வேலைதொடர்பான மனஅழுத்தம், இரவுநேர வேலை முதலானவைதான் காரணமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: அமெரிக்காவுடன் வர்த்தகப் போருக்கு தயாராகும் சீனா?
அமர்ந்த நிலையிலேயே பணியில் இருக்கும் ஊழியர்கள் எடுத்துக் கொள்ளும் அதிக கலோரி உணவுகள், சர்க்கரை கலந்த பானங்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள், உடல் செயல்பாடு அதிகம் இல்லாமை போன்றவை கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தைத் தூண்டுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகளவில் 30 சதவிகிதத்தினர் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மூன்றில் ஒருவராக, அதாவது 33 சதவிகித இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்புற மக்களுக்கே இப்பிரச்னை அதிகமாக உள்ளதும், அதிலும் ஐடி ஊழியர்களே 40 சதவிகித பாதிக்கப்படுவதாகவும் ஆய்வில் கூறுகிறது.
இந்த நோய், அடிப்படையில் கொழுப்பு கல்லீரல், உடல் பருமன், நீரிழிவு, அதிகரித்த இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 71 சதவிகிதத்தினர் பருமன் பிரச்னையுடனும், 34 சதவிகித்தினர் வளர்சிதை மாற்ற நோய் அறிகுறியையும் கொண்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
இந்த நோயிலிருந்து தப்பிக்க யோகா மற்றும் உடற்பயிற்சி, சர்க்கரை அதிகமுள்ள உணவுப் பொருள்களை தவிர்ப்பது, உடலுக்கும் அவ்வப்போது உழைப்பு கொடுத்தல் முதலான பழக்கவழக்கங்களாள் தடுக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.