
பெங்களூரு விமான நிலையத்தில் 14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக மாணிக்யா படத்தில் அறிமுகமான ரன்யா ராவ், தமிழில் விக்ரம் பிரபுடன் வாஹா படத்திலும் நடித்துள்ளார்.
பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு ரன்யா ராவ் உரிய ஆவணங்கள் இல்லாத 14.8 கிலோ தங்கம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அவரைக் கைது செய்த நிலையில், பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 15 நாள்களில் ரன்யா ராவ் நான்கு முறை துபைக்குப் பயணம் செய்துள்ளார். இதனால், அவர் தனியாக தங்கம் கடத்தினாரா? அல்லது அவருக்குப் பின்னால் யாரும் உள்ளனரவா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.