சித்திரப் படம்
சித்திரப் படம்

பசுக்களை ஏற்றிச் சென்ற லாரி: ஓட்டுநர், உதவியாளரை அடித்துக் கால்வாயில் வீசிய பசுக் காவலர்கள்!

பசுக் காவலர்களால் தாக்கப்பட்ட லாரி ஓட்டுநர், உதவியாளர்...
Published on

ஹரியாணா மாநிலத்தில் பசுக்களை ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை தாக்கிய பசுக் காவலர்கள், அவர்கள் இருவரையும் கால்வாயில் வீசிச் சென்றனர்.

இந்த சம்பவத்தில், லாரியின் உதவியாளர் உயிரிழந்த நிலையில், 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தானில் இருந்து லக்னெளவுக்கு பசுக்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி சென்றுள்ளது. ஹரியாணா மாநிலம் பல்வால் மாவட்டம் வழியாக லாரி சென்று கொண்டிருந்தபோது, பசுக் காவலர்கள் வழிமறித்துள்ளனர்.

பசுக்களை கடத்திச் செல்வதாக எண்ணி ஓட்டுநர் பால்கிஷன் மற்றும் உதவியாளர் சந்தீப்பை கொடூரமாக தாக்கி, கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர். நீச்சல் தெரிந்ததால் ஓட்டுநர் பால்கிஷன் உயிர்தப்பினார்.

இந்த நிலையில், உதவியாளர் சந்தீப்பில் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 11 பேரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் 5 பேரைக் கைது செய்துள்ளனர்.

லாரியில் பசுக்களை எடுத்துச் செல்வதற்கான ஆவணங்களை காவல்துறையினரிடம் ஓட்டுநர் வழங்கியுள்ளார்.

சந்தீப்பின் உடற்கூராய்வு முடிவில், அவர் தாக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கைது செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com