
பஞ்சாபில் தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.
பஞ்சாப் பமாநிலம், ஃபோகல் பாயிண்ட் பகுதியில் ஜவுளித் தொழிற்சாலையின் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளி ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை மற்றும் காவல்துறை உள்ளிட்ட குழுவினர் மீட்டுப் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய ஆறு தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர். அதில் ஒருவர் பலியான நிலையில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
கட்டடம் இடிந்து விழுவதற்கு முன்பு ஒரு பெரிய சத்தம் கேட்டதாக நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
தொழிற்சாலையில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், அப்போது தூண் இடிந்து விழுந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே இடிபாடுகளுக்கு அடியில் யாராவது சிக்கியுள்ளார்களா என்று ஞாயிற்றுக்கிழமையும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.