ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி

மக்களுக்கு இலவச உணவு தானியங்களைப் பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.

Pralhad Joshi

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி - ENS

Published On :12 மார்ச் 2025, 3:16 pm IST

80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்க முன்முயற்சி எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு மார்ச் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதை நோக்கமாக கொண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 தலைவர் சோனியா காந்தியின் சிந்தனையில் உருவானது என்று காங்கிரஸ் உறுப்பினர் பிரணிதி ஷிண்டேவின் கருத்துக்கு மத்திய உணவு அமைச்சர் பதிலளித்தார்.

தேர்தலுக்காக மட்டுமே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் காங்கிரஸ் 2013இல் கொண்டு வந்தது. இது சீரற்ற முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் விதிகள் கூட வகுக்கப்படவில்லை என்று ஜோஷி கூறினார்.

2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது, ​​ஏழைகளின் வலியைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு இலவச உணவு தானியங்களை உறுதி செய்வதற்கான முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டதாக அவர் கூறினார்.

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களைப் பிரதமர் மோடி வழங்கி வருகிறார். ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மோடி அரசு மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. இதன் கீழ் ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாட்டில் எங்கும் இலவச உணவு தானியங்களைப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.