ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி!

ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் பற்றி பாஜக கேள்வி.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on
Updated on
1 min read

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய அரசியல் குற்றச்சாட்டுகள் பாஜகவினரால் எப்போதும் வைக்கப்படும். ராகுல் உள்நாட்டு அரசியலுக்கு தகுதியற்றவர் என சித்தரிக்கும் விதமாக பாஜகவினர் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக அரசு அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார். அப்போது, “ராகுல் காந்தி எங்கே? அவர் வியட்நாம் சென்றதாக நான் கேள்விப்பட்டேன்.

புத்தாண்டு தொடக்கத்தின்போது ராகுல் காந்தி வியட்நாமில் இருந்தார். அங்கு 22 நாள்கள் தங்கியிருந்தார். அவருடைய சொந்தத் தொகுதியில் கூட அவர் இவ்வளவு நாள்கள் தங்கியதில்லை. திடீரென வியட்நாம் மீது அவருக்கு இந்தளவு விருப்பம் வரக் காரணம் என்ன?

எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இந்தியாவில் இருக்கவேண்டும். வியட்நாம் மீது அவர் கொண்டுள்ள அளவில்லா பாசம் குறித்து அவர் விளக்கம் தர வேண்டும். அங்கு அவர் தொடர்ந்து செல்வது குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது” என்று பேசினார்.

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவரான அமித் மால்வியா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ராகுல் காந்தி அடிக்கடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் அதன் விவரங்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்படுவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக, ராகுல் காந்தி ஒரு முக்கிய பதவியை வகிக்கிறார். அவர் அடிக்கடி மேற்கொள்ளும் ரகசிய வெளிநாட்டுப் பயணங்கள் குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் போது அவர் இவ்வாறு சென்றிருப்பது நாட்டின் பாதுகாப்பு பற்றி கடுமையான கேள்விகளை எழுப்புகின்றது” எனப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தியின் தனிப்பட்ட பயணங்களை அரசியலாக்குவது குறித்து குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி ஒரு தனிநபராக அவருக்கு வெளிநாடு செல்ல உரிமை உண்டு என்று கூறியுள்ளது.

கடந்த டிசம்பர் 26 அன்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங்கின் மறைவைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் பாஜகவின் விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com