சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!

பாலியல் வன்கொடுமை குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மார்ச் 2025, 3:22 am

DIN

உ.பி.யில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி துப்பாக்கியால் சுடப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அமன் புத்ரா சந்த் கான் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று அவரை நீதிமன்றத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்புக்கு உடன் வந்த போலீஸ் ஒருவரின் துப்பாக்கியை எடுத்த அந்த நபர் தப்பித்துச் சென்றுள்ளார். அவரைப் பிடிக்கச் சென்ற போலீஸை நோக்கி துப்பாக்கியால் அவர் சுட்டதில் போலீஸ் ஜீப் சேதமடைந்தது .

இதுகுறித்து ஹத்ராஸ் எஸ்பி கூறுகையில், “நேற்று இரவு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் முன்பு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்று அனுமதி கேட்டுச் சென்றார்.

திடீரென பாதுகாப்புக்கு வந்த போலீஸின் துப்பாக்கியை எடுத்துத் தப்பிக்க முயன்றார். எங்கள் மீது துப்பாக்கியால் சுட்ட அந்த நபரை நாங்கள் திருப்பிச் சுட்டதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது” எனத் தெரிவித்தார்.

மாவட்ட மருத்துவமனையில் குற்றவாளி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.