நாக்பூர் வன்முறையில் பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

நாக்பூர் வன்முறையில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பற்றி...
கலவரப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள்.
கலவரப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள்.ANI
Published on
Updated on
1 min read

நாக்பூர் வன்முறையின்போது பெண் காவலரை போராட்டக்காரர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள முகாலய மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி அந்த நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.

இந்த வன்முறை சம்பவங்களில் 3 துணை ஆணையர்கள் உள்பட 33 போலீஸார், பொதுமக்கள் பலர் காயமடைந்தனா். இதுகுறித்து நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த கலவரத்தைத் தூண்டுவதற்கு பின்னணியில் செயல்பட்ட முக்கிய குற்றவாளியான பஹீம் கான் என்பவரை நாக்பூர் காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை

நாக்பூர் வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

”வன்முறை தொடர்பாக நாக்பூரில் மொத்தம் ஐந்து முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசியது மற்றும் கற்கள் வீசியது தொடர்பாக கணேஷ்பேத் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்த பெண் காவலரை இருளைப் பயன்படுத்தி சிலர் தகாத இடங்களில் தொட முயன்றனர். மேலும் அவரது உடையைக் களைய முயற்சித்துள்ளனர். பெண் காவலர்களை மோசமாக வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதுதொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

கலவரத்தின் பின்னணி

மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று மாநிலத்தின் முக்கிய வலதுசாரி அமைப்புகள் போா்க்கொடி உயா்த்தியுள்ளன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் சொந்த ஊரான மத்திய நாகபுரியின் சிட்னிஸ் பூங்கா பகுதியில் திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஒரு சமூகத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை நோக்கி சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தி, வன்முறையைத் தூண்டினர்.

பின்னா், இரவு 10.30 மணியளவில், நகரின் மற்றொரு பகுதியான ஹம்சபுரியில் மோதல் வெடித்தது. அங்கு பொதுமக்களின் வீடுகள் மற்றும் ஒரு மருத்துவமனையைச் சூறையாடிய வன்முறை கும்பல், வீடுகளுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com