
அந்தமான் தீவு அருகே ரூ. 36,000 கோடி போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அந்தமான் கடல் பகுதியில் பாரன் தீவு அருகே கடந்தாண்டு நவம்பர் மாதம், போதைப்பொருளுடன் சென்ற மியான்மர் கும்பலின் மீன்பிடி படகு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்திய கடற்பரப்பை நோக்கி வந்தது.
இந்த நிலையில், ரூ. 36,000 கோடி மதிப்பிலான 6,016 கிலோ தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் படகில் இருப்பது தெரிய வந்தது. செயற்கைக்கோள் தொலைபேசிகள், ஜிபிஎஸ் சாதனங்கள் உள்பட பல மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
படகில் இருந்த மியான்மரைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மியான்மர் கும்பலுக்கு எதிராக 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
இதையும் படிக்க: வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் இந்தியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.