கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத்: ஏப்ரல் 19-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிவைக்கிறார்.

News image
Updated On :28 மார்ச் 2025, 11:34 am

DIN

காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து இதனை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கத்ராவில் நடைபெறும் பேரணி ஒன்றிலும் பிரதமர் உரையாற்ற உள்ளார். ஆரம்பத்தில் கத்ரா மற்றும் ஸ்ரீநகர் பாதையில் ஒரே ஒரு வந்தே பாரத் ரயில் மட்டுமே இயக்கப்படும்.

பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து இந்தப் பாதையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு சென்ற ரயில்வே பாதுகாப்பு ஆணையர், கத்ரா மற்றும் காஷ்மீர் இடையே ரயில் சேவைக்கு அனுமதி வழங்கினார்.

தற்போது, ​​பள்ளத்தாக்கில் உள்ள சங்கல்டன் மற்றும் பாரமுல்லா இடையேயும், கத்ராவிலிருந்து நாடு முழுவதும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக காஷ்மீர் பாதையில் பகல் நேரத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன, மாலையில் பாதுகாப்புப் பணிகள் திரும்பப் பெறப்படுவதால், பள்ளத்தாக்கில் மாலை நேரங்களில் எந்த ரயில்களும் இயக்கப்படுவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.