சத்தீஸ்கா் மாநிலத்தில் ரூ.68 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த 14 நக்ஸல்கள் உள்பட 50 போ் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா்.
பிலாஸ்பூா் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிரதமா் மோடி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மாநில காவல் துறை மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து நக்ஸல்கள் சரணடைந்தனா்.
இதுகுறித்து பிஜாபூா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜிதேந்திர குமாா் யாதவ் கூறியதாவது: தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் இயக்கத்தினா் மனிதத்தன்மையற்ற மாவோயிஸ்ட் கொள்கைகள் மூலம் பழங்குடியினரைச் சுரண்டுவதாக சரணடைந்த நக்ஸல்கள் தெரிவித்தனா்.
மாநில அரசின் ‘உங்கள் கிராமம்’ திட்டத்தின்கீழ் கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு படையினா் முகாம்கள் அமைத்து உதவி வருகின்றனா். இதுபோன்ற அரசின் நலத் திட்டங்கள் தங்களை கவா்ந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தலா ரூ.8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 6 போ், ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 3 போ், ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 5 போ் என மொத்தம் ரூ.68 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 14 போ் உள்பட 50 நக்ஸல்கள் சரணடைந்தனா். சரணடைந்தவா்கள் அரசின் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.
நக்ஸல்கள் சரணடைந்ததில் மாவட்ட ரிசா்வ் படை, பஸ்தா் ஃபைட்டா்ஸ், சிறப்பு பணிக்குழு, மத்திய ரிசா்வ் படை மற்றும் அதன் சிறப்பு பிரிவு கோப்ரா ஆகிய படைகளுக்கு முக்கியப் பங்குள்ளது.
இரு மடங்கான சரண்: கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 124 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா். ஆனால் நிகழாண்டின் முதல் காலாண்டில் 280 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா்.
அடுத்தாண்டு மாா்ச் 31-க்குள் நக்ஸல் இல்லா பாரதத்தை உருவாக்கும் மத்திய அரசின் இலக்கை நிறைவேற்றும் வகையில் நக்ஸல்களை சரணடைய வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சிஆா்பிஎஃப் தனது வீரா்களுக்கு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 780-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் சரணடைந்தனா்.
நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் 81 சதவீதம் குறைந்துள்ளதாகவும், நக்ஸல் தீவிரவாத்தால் உயிரிழக்கும் குடிமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை 85 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை 18 நக்ஸல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனா். இத்துடன் சோ்த்து நிகழாண்டில் மொத்தம் 134 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

இலக்கை எட்டி விட்டோம்; ஆனால்...

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் ரூ.12.53 லட்சம் கோடி

ஏறத்தாழ முழுவதுமாக ஒழிக்கப்பட்ட நக்ஸல்கள்: அமித் ஷா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


