பஹல்காம் தாக்குதல்: எல்லையோர பயங்கரவாத முகாம்களை காலி செய்த பாகிஸ்தான்! ஏன்?

பாலாகோட் தாக்குதல் போன்று நடத்தப்படலாம் எனக் கருதி எல்லையோர பயங்கரவாத முகாம்களை காலி செய்தது பாகிஸ்தான்
pahalgam attack
பஹல்காமில் தாக்குதல் நடந்த பகுதி
Updated on
1 min read

புது தில்லி: ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில் இந்தியா எதிர்பாராத தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எல்லையோர பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் காலி செய்துவிட்டது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளில் பல்வேறு பயங்கரவாத முகாம்கள் அமைக்கப்பட்டு இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ என்னேரமும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பர்.

ஜம்மு பகுதியைச் சுற்றி இதுபோன்ற மிகப்பெரிய மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவும் தளங்கள் இருந்துள்ளதை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்திருக்கிறார்கள்.

லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த தலா பத்து பயங்கரவாதிகள் இந்த தளங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். அந்த வகையில் ஏப்ரல் 22ஆம் தேதி வரை அங்கு ஆள் நடமாட்ம் இருந்துவந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் இயக்கப்பட்டு வந்த தளங்கள் தற்போது காலியாக இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு பாலாகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப் படை, அதிரடியாக அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பெரிய அளவில் பயங்கரவாதிகளைக் கொன்று குவித்து விட்டு வந்தது.

இந்த நினைவு பாகிஸ்தானுக்கு இருக்கும் என்பதால், அதுபோன்றதொரு தாக்குதலை மீண்டும் இந்தியா நடத்தக்கூடும் என்று கருதியே பயங்கரவாதத் தளங்கள் காலி செய்யப்பட்டிருக்கலாம் என்றும், சில காலம் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்தவிட்டு மீண்டும் இங்கு வரலாம் என்றும் இந்திய மூத்த உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com