

ஜம்மு-காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 3 வீரர்கள் பலியானார்கள்.
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம் சாலையை விட்டு விலகி 700 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று வீரர்கள் பலியாகினர்.
ஞாயிறு காலை 11.30 மணியளவில் பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவம், காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து உடனடியாக மீட்புப் பணியைத் தொடங்கினர். விபத்து நடந்த இடத்திலிருந்து மூன்று வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
பலியானவர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர்.
வாகனம் விழுந்ததில் முற்றிலும் உருக்குலைந்து காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.