லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாட்ரிட் ஓபனில் 3-ஆவது முறையாக பட்டம் வென்ற சபலென்கா..!

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

சபலென்கா - படம்: ஏபி

Published On :4 மே 2025, 1:11 pm IST

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிப் போட்டியில் பெலாரஸின் அரினா சபலென்கா பட்டம் வென்று அசத்தினார்.

போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா தரவரிசையில் 4ஆவதாக இருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃபுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் 6-3, 7-6 (3) என்ற செட்களில் சபலென்கா அசத்தல் வெற்றி பெற்றார்.

இந்தப் போட்டி 1 மணி நேரம் 39 நிமிஷங்கள் தொடர்ந்தது. இதில் முதல், இரண்டாவது சர்வீஸ்களில் முறையே 68, 75 சதவிகித வெற்றிகளைப் பெற்றார்.

இருவரும் இதுவரை 10 முறை சந்தித்து கௌஃப் 5 முறையும், சபலென்கா 5 முறையும் வென்றுள்ளனா். 

மாட்ரிட் ஓபனில் இது சபலென்காவுக்கு 3ஆவது பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது சபலென்காவுக்கு இது 20ஆவது சாம்பியன் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் சபலென்கா 6-3, 7-5 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 17-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை 1 மணி நேரம், 32 நிமிஷங்களில் சாய்த்திருந்தார்.

இறுதியில் வென்றது குறித்து சபலென்கா கூறியதாவது:

இது மிகவும் கடினமான போட்டி. 2ஆவது செட்டின் கடைசியில் மிகவும் தீவிரமாகச் சென்றது. நான் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தேன். அதைச் சரியாக கையாண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

சாம்பியன் பட்டத்துடன் சபலென்கா.

சாம்பியன் பட்டத்துடன் சபலென்கா. - ap

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.