இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.
மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையான ஸ்விடோலினா 6-4, 6-7 (3/7), 6-2 என்ற செட்களில், 4-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தினார். இந்த ஆட்டம் சுமார் 3 மணிநேரம் நீடித்தது.
இந்த வெற்றியின் மூலமாக, இத்தாலியின் ஓபன் போட்டியில் அவர், 3-ஆவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளார். இதற்கு முன் ஸ்விடோலினா 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் இங்கு பட்டம் வென்றுள்ளார்.
அத்துடன் களிமண் களத்தில் நடைபெறும் போட்டிகளில் இதுவரை விளையாடிய 8 இறுதிச்சுற்றுகளிலுமே அவர் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கெüஃப் - ஸ்விடோலினா மோதியது இது 6-ஆவது முறையாக இருக்க, ஸ்விடோலினா 4-ஆவது வெற்றியுடன் முன்னிலையை அதிகரித்துள்ளார்.
மறுபுறம் கெüஃப், இத்தாலியன் ஓபன் போட்டியில் தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக இறுதியில் தோல்வியைச் சந்தித்தார். சாம்பியனான ஸ்விடோலினாவுக்கு வெற்றிக் கோப்பை, 1,000 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.11.64 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. 2-ஆம் இடம் பிடித்த கெüஃபுக்கு ரன்னர் அப் கோப்பையுடன், 650 தரவரிசை புள்ளிகளும், ரூ.6 கோடியும் பரிசாகக் கிடைத்தது.
இரட்டையர் பிரிவு: இத்தாலியன் ஓபன் ஆடவர் இரட்டையரில், உள்நாட்டின் சைமன் பொலெலி/ஆண்ட்ரியா வவாசோரி இணையும், மகளிர் இரட்டையரில் ரஷியாவின் டயானா ஷ்னெய்டர்/மிரா ஆண்ட்ரீவா கூட்டணியும் வாகை சூடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்ட்ரீவாவை வெளியேற்றினாா் கௌஃப்

காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

வைஷாலியின் வியத்தகு வெற்றி!
ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ்: வாகை சூடினாா் எலனா ரைபகினா!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

