
சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 15-க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் கர்ரேகுட்டா மலைப்பகுதி அருகே இன்று(புதன்கிழமை) பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு, நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அப்போது நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் நடைபெற்ற இந்த மோதலில் 15-க்கும் மேற்பட்ட நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன ஆயுதங்கள், வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று(செவ்வாய்க்கிழமை) பெண் நக்சல் ஒருவர் இதேபகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.