அதிரடித் தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிட்டது ஏன்?

அதிரடித் தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் சிந்தூர்
தாக்குதல் சிந்தூர்
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சப்தமே இல்லாமல் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியா அதிரடித் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் இந்திய ராணுவம் நடத்திய மிக முக்கிய தாக்குதலாகவும் இந்த சிந்தூர் தாக்குதல் மாறியிருக்கிறது.

பொதுவாக தாக்குதல் நடத்தப்பட்ட இடம் அல்லது அது தொடர்பான பெயர்களுடன் இந்த அதிடிரத் தாக்குதல் அடையாளப்படுத்தப்படும். ஆனால், இந்த தாக்குதலுக்கு பெண்கள் நெற்றியில் இடும் சிந்தூர் என்ற திலகத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கிறதாம். சிந்தூர் என்பது திருமணமான பெண்கள் நெற்றி வகிடில் இடும் குங்குமத்தைக் குறிக்கும் என்பதால், பஹல்காம் தாக்குதலில், தங்களது கண் முன்னே கணவர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்த, இந்த பயங்கரவாதத் தாக்குதலில் கணவனை இழந்த பெண்களின் குங்குமத்துக்கு பதில் சொல்லும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், அதனால்தான் சிந்தூர் என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா தனது அதிரடித் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. இது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு- காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com