
3 மணிநேரத்துக்கு முன் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீரில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடித் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் பாகிஸ்தானின் விமானப் படையைச் சேர்ந்த 3 விமானங்களை சுட்டு வீழ்த்தியது.
இந்திய விமான நிலையங்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்கும் வகையில் அரசு உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு சிவில் விமானப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக மூன்று மணிநேரத்துக்கு முன்னதாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விமான நிலையங்களில் உள்ள அனைத்து பயணிகளும் சோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள். விமான நிலையத்துக்குள்ளாக பார்வையாளர்கள், உறவினர்கள் நுழைவது தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும், கூடுதலாக 7 கிலோ வரையிலான கைப்பை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்து சிசிடிவி கேமராக்களும் செயல்படும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய விமான நிலைய இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு பயணிகள் மற்றும் ஊழியர்களின் அடையாள அட்டைகளை முறையாக சரிபார்ப்பது, விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு பயணிகளின் பொருள்களையும் முறையாக சோதனை செய்ய வேண்டும்.
பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க விமான நிலையங்கள், விமான ஓடுபாதைகள், விமானப்படை நிலையங்கள், ஹெலிபேடுகள், விமானப் பயிற்சி நிறுவனங்கள் போன்ற அனைத்து சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: போர்ப் பதற்றம்: இருளில் மூழ்கியது ஜம்மு - காஷ்மீர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.