இருளில் மூழ்கியது ஜம்மு - காஷ்மீர்!

பாகிஸ்தான் உடனான போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதுமே இருளில் மூழ்கியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்PTI
Updated on
1 min read

பாகிஸ்தான் உடனான போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதுமே இருளில் மூழ்கியுள்ளது.

எல்லையோரப் பகுதியில் வசித்துவரும் மக்கள் பதுங்கு குழிகளுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மட்டுமின்றி, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துள்ள ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நடுவானிலேயே இந்திய ராணுவம் அவற்றை தாக்கி அழித்தது.

இதனைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைப் பகுதிகளில் விமானப் படையினரும் ராணுவத்தினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானின் போர் விமானம் தகர்ப்பு

ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேஎஃப்-17 விமானங்கள் தாக்கப்பட்டதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.

ஜம்மு, ஆர்.எஸ்.புரம், சானி ஹிமாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் உள்ள ராணுவ மற்றும் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் பல ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

எஸ்.400 மற்றும் ஆகாஷ் ஆகிய போர் விமானங்கள் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக வீழ்த்தின. மொத்தமாக 8 பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதையும் படிக்க | ஜம்மு விமான நிலையத்தை தாக்க முயன்ற பாகிஸ்தானின் எஃப்-16! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com