
மன உறுதியும் விடாமுயற்சியும்... ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஜெய் ஷா புகழாரம்!
முதல்முறையாக ரஞ்சி கோப்பை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஜெய் ஷா கூறியிருப்பதாவது...

ரஞ்சி கோப்பையுடன் ஜம்மு காஷ்மீர் அணியினர். - பிடிஐ
முதல்முறையாக ரஞ்சி கோப்பை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஐசிசி தலைவரும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் தன்னுடைய எக்ஸ் பதிவில், “மன உறுதியும் விடாமுயற்சியும் கொண் ஜம்மு காஷ்மீர் அணி மறக்க முடியாத அளவுக்கு வரலாறு படைத்துள்ளது” எனப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 584 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய கர்நாடகம் அணி தனது முதல் இன்னிங்ஸில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்ததாக, தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி 113 ஓவர்களில் 342/4 ரன்கள் எடுத்து ஐந்தாம் நாள் முடிவு வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இதனால், ஆட்டம் சமனில் முடிந்தாலும், முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த ஜம்மு காஷ்மீர் அணி கோப்பை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

பள்ளிக் குழந்தைகளின் ஆதரவு. - படம்: பிடிஐ
ஜம்முவில் பள்ளிக் குழந்தைகள் இந்த அணிக்கு ஆதரவாக தேசியக் கொடியுடன் கோஷங்கள் இட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன. இது குறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறியதாவது:
மன உறுதி, விடாமுயற்சியைக் காண்பிக்கும் விதமாக இந்தியாவிலுள்ள ஜம்மு காஷ்மீர் அணி வரலாறு படைத்ததுக்கு வாழ்த்துகள்.
ஜம்மு காஷ்மீர் வீரர்கள் தாங்கள் பெறும் அனைத்து விதமான புகழ்ச்சிக்கும் தகுதியானர்கள். குறிப்பாக, இந்த சாதனையை நிகழ்த்த உதவிய ஜம்மு காஷ்மீர் அணியின் பயிற்சியாளர்கள், மேலாளர்கள் அவர்களுக்கும் இந்தப் பாராட்டுகள் செல்ல வேண்டும்.
இந்த வெற்றி ஜம்மு காஷ்மீரில் இளம் தலைமுறைகள் இதயத்தில் நம்பிக்கையைக் கொடுக்கும். இதனால், அந்த மக்களில் யாரோ ஒருவர் அடுத்ததாக பேட்டையோ பந்தினையோ எடுப்பார்கள்.
இந்த மாதிரியான தன்னம்பிக்கை கதைகள் உலகத்தில் எங்கும் கிடைக்குமளவுக்கு நமது விளையாட்டு மிகவும் புகழ்பெற்றது. இதற்கு நல்ல மரியாதை கிடைக்குமென நம்புகிறேன் என்றார்.
Congratulations to the Jammu & Kashmir team in India for scripting a remarkable story of grit and perseverance.
— Jay Shah (@JayShah) February 28, 2026
While the players are fully deserving of the adulation they receive, one must also remember the contribution of the coaching staff, management and administrators from⦠https://t.co/hbRwF1S41O
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






