எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் குறித்து...

News image
இறுதிப் போட்டியில் சதமடித்த சுபம் பண்டிர். - படம்: பிசிசிஐ டொமஸ்டிக்.
Updated On :24 பிப்ரவரி 2026, 1:02 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர் அணி 284 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியில் சுபம் பண்டிர் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டி கர்நாடகத்தில் உள்ள ஹூப்ளியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் 87 ஓவர்களில் 284/2 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் தொடக்க வீரர் கம்ரான் இக்பால் 6 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றுமொரு தொடக்க வீரர் யாவேர் ஹாசனும் நம்.3-ல் களமிறங்கிய சுபம் பண்டிரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினார்கள்.

யாவேர் ஹாசன் 88 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த அணியின் கேப்டன் பராஸ் டோக்ரா காயம் காரணமாக 9 ரன்களில் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

அடுத்ததாக களமிறங்கிய அதிரடி வீரர் அப்துல் சமத் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

நம்.3ல் களமிறங்கிய சுபம் பண்டிர் 221 பந்துகள் விளையாடி 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அப்துல் சமத்துடன் இருக்கிறார்.

67 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்களைக் குவித்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்குமென கணிக்கப்படுகிறது.

கர்நாடக அணியின் சார்பில் பிரசித் கிருஷ்ணா மட்டுமே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.