
ஜம்மு-காஷ்மீரில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வரப்படுகிறது. பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்திய ராணுவம் இடைமறித்து தாக்கி வீழ்த்தி உள்ளன.
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் மின் விநியோகம் வெள்ளிக்கிழமை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா, குப்வாரா, பந்திபுரா ஆகிய மாவட்டங்களின் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பதுங்கு குழிகள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பஞ்சாப் மாநிலம், ஃபிரோஸ்புரில் குடியிருப்புப் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்கியதில் சிலர் காயமடைந்தனர்.
உடனே அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று ஏஎன்ஐ தகவல் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.