மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! - விக்ரம் மிஸ்ரி

பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தின் பதிலடி குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் விளக்கமளித்தது பற்றி...
விக்ரம் மிஸ்ரி
விக்ரம் மிஸ்ரி
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி இந்தியாவின் எல்லைப்புற நகரங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் எஸ்-400 பயன்படுத்தி ஏவுகணை நடுவானிலேயே அழித்து ஒழித்தனர்.

போர்ப் பதற்றம் பற்றி வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோஃபியா குரேஷி, ஆகியோர் புது தில்லியில் இன்று மாலை 5.30 மணியளவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.

இதுகுறித்து விளக்கமளித்த மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், “பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. குருத்வாரா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால், மத ரீதிலான கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருக்கிறது. மேலும், பொய்த் தகவல்கள் மூலம் உலகை ஏமாற்றிவருகிறது பாகிஸ்தான்.

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. பூஞ்ச் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றையும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் 2 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், அவர்களது பெற்றோர் காயமடைந்துள்ளது.

இந்திய ராணுவம் சீக்கிய வழிபாட்டுத் தலம் மீது தாக்குதல் நடத்தியதாக மீண்டும் பொய் கூறியிருக்கிறது. மே 7 ஆம் தேதி பள்ளிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், பள்ளி விடுமுறை என்பதால், நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

பஹவல்பூர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் தலைமையிடமாக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் அப்துல் ரவூப் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை நிறுத்த சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா நாடியிருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் பற்றி அமெரிக்காவிடம் எடுத்துரைத்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவளித்துள்ளன”என்றார்.

இதையும் படிக்க: இந்திய ராணுவ நிலைகளை தாக்க பாகிஸ்தான் முயற்சி: கர்னல் சோஃபியா குரேஷி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com