கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ராஜஸ்தான், பஞ்சாபில் எல்லையோரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்: உஷார் நிலையில் பாதுகாப்புப்படை!

பாகிஸ்தானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டால் அவற்றை முறியடிக்க உஷார் நிலையில் பாதுகாப்புப்படை

News image
Updated On :11 மே 2025, 3:58 pm

DIN

புது தில்லி: ராஜஸ்தான், பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றிரவும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இரவில் ட்ரோன், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் எதிரிகள் தாக்குதல்களைத் தொடுத்தால் எதிர்கொள்ளவும் அவற்றை முறியடிக்கவும் பாதுகாப்புப்படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலும் சண்டை நீடித்தது. இந்த சண்டை நேற்றிரவு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 4 நாள்களாக ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப்பில் அசாதாரண சூழல் நிலவியதைத்தொடர்ந்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ராஜஸ்தான், பஞ்சாபில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றிரவும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.