கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் மீண்டும் இயல்புநிலை

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை காலை இயல்பு நிலை திரும்பியது.

News image

ஜம்மு-காஷ்மீர் சாலை.

Updated On :11 மே 2025, 7:10 am

DIN

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை காலை இயல்பு நிலை திரும்பியது.

பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா கடந்த 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது.

இதைத் தொடா்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் வான்வழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் இந்தியாவால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் விமான ஓடுதளம், ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் தகா்க்கப்பட்டன.

இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக அமெரிக்கா நடத்திய பேச்சுவாா்த்தையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் அமலுக்கு வந்தது. ஆனால் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த சண்டை நிறுத்த மீறலை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும்.

பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை இரவு தெரிவித்தார். இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை காலை இயல்பு நிலை திரும்பியது.

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங், இரவு முழுவதும் எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை என்று கூறினார். குப்வாரா, பூஞ்ச், உரி உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீரின் மற்ற பகுதிகளிலும் அமைதியான சூழ்நிலையே நிலவியது. இதேபோல் பஞ்சாபின் பிரோஸ்பூர் மற்றும் பதான்கோட்டிலும் இயல்புநிலை திரும்பியதோடு சாலைகளில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.

மேலும் ராஜஸ்தான் மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.