நாட்டு மக்களுக்காக இன்றிரவு 8 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்டது.
இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதத் தளங்களை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றன. பின்னர் மே 8, 9, 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் பல இந்திய ராணுவத் தளங்களைத் தாக்க முயன்றது.
பின்னர், ரஃபிகி, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர் மற்றும் சுனியன் உள்ளிட்ட பல பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ஆயுதப் படைகள் கடுமையான எதிர் தாக்குதலைத் தொடங்கின.
நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடுகளையும் ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டியதையடுத்து, மே 10-ஆம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலானது.
இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு 8 மணிக்கு முதல் முறையாக உரையாற்றுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.