வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

2 வது முறையாக அதிபர் டிரம்ப்பை சந்திக்கும் முகேஷ் அம்பானி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க முகேஷ் அம்பானி கத்தார் சென்றுள்ளார்.

News image
அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க கத்தார் சென்றுள்ளார் முகேஷ் அம்பானி
Updated On :14 மே 2025, 12:11 pm

DIN

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து 2வது முறையாக அவரைச் சந்திக்க முகேஷ் அம்பானி கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறைப்பயணமாக கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளார். அவரைச் சந்திக்க ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி அந்நாட்டு தோஹா நகருக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தோஹாவிலுள்ள லுசைல் மாளிகையில் கத்தார் மன்னர், அதிபர் டிரம்ப்-க்கு இன்று (மே 14) அளிக்கும் அரசு விருந்தில் முகேஷ் அம்பானியும் கலந்துக்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் மிகப் பெரியளவில் அம்பானியின் நிறுவனங்களின் மீது முதலீடு செய்துள்ளன.

இத்துடன், வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதியில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டிருந்தது. ஆனால், தென் அமெரிக்க நாடுகளிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது அதிபர் டிரம்ப் 25 சதவிகிதம் வரி விதித்ததால் மார்ச் மாதம் அந்த இறக்குமதி நிறுத்தப்பட்டது.

அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை அம்பானியின் டிஜிட்டல் முயற்சிகளில் பங்குகளை வாங்கியுள்ளன.

முன்னதாக, அம்பானி குடும்பம் அதிபர் டிரம்ப்-ன் குடும்பத்துடன் நெருங்கிய உறவை பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீடா அம்பானி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும், பதவியேற்புக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விருந்தாளிகளுக்கு டிரம்ப் வழகிய விருந்தில் அம்பானி குடும்பம் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.