எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

போர்களின் முடிவுக்கு உலகத் தலைவர்களுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார்! புதிய போப்!

உலகில் நடைபெறும் போர்களை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்ய தயார் என போப் பதினான்காம் லியோ தெரிவித்துள்ளார்.

News image

புதிய போப் பதினான்காம் லியோ. - ஏபி

Updated On :14 மே 2025, 5:04 pm IST

போரில் ஈடுபட்டுள்ள நாடுகளிடையே போர்நிறுத்தம் கொண்டு வர அந்நாட்டு தலைவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என புதிய போப் பதினான்காம் லியோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் போப் பிரான்சிஸ் கடந்த ஏப். 21 ஆம் தேதியன்று உடல்நல குறைவினால் தனது 88 ஆம் வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பின்னர் கார்தினல்களின் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் ஃபிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போப் பதினான்காம் லியோ என்று அழைக்கப்படும் அவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாகவும், வாடிகன் நகரத்தின் தலைவராகவும் வரும் மே 18 ஆம் தேதியன்று பதவியேற்கவுள்ளார்.

வாடிகனிலிருந்து மக்களுக்கு அவர் ஆற்றிய முதல் உரையிலிருந்தே, உலக அமைதியை நிலைநாட்டவும், போர்களை முடிவுக்கு கொண்டு வருவதைப் பற்றியும் அவர் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலுள்ள கிழக்கு கத்தோலிக்க தேவாலயங்களின் புனித ஜுபிலி ஆண்டிற்கான முன் ஏற்பாட்டு நிகழ்ச்சி இன்று (மே 14) நடைபெற்றது.

அப்போது, பேசிய போப் பதினான்காம் லியோ போரில் ஈடுபட்டுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய தான் முன்வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், மத்திய கிழக்கிலுள்ள கிறுஸ்துவ மக்கள் தங்களது தாயகத்திலிருந்து இடம்பெயர வேண்டாம் எனக் கூறிய அவர் ‘வன்முறைகளுக்கு இடையில் உங்களைத் தவிர வேறு யாரால் அமைதியை நிலைநிறுத்த முடியும்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

உக்ரைன், லெபனான் முதல் சிரியா வரை, மத்திய கிழக்கிலிருந்து திக்ரே மற்றும் கௌகாசஸ் ஆகிய பிரதேசங்கள் வரையில் வன்முறைகள் அதிகரித்துள்ளதை நாம் பார்க்கலாம். உலக அமைதிக்காக நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

உலக அமைதி நிலைக்க, என்னுடைய பங்கிற்கு என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்.

எதிராளிகள் நேருக்கு நேராக வந்து ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்கு இந்தப் புனித பேராலயம் எப்போதும் தயாராகவுள்ளது. அதன்மூலம், மக்கள் நம்பிக்கை பெறுவார்கள். என அவர் பேசியுள்ளார்.

மேலும், மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலுள்ள கிறுஸ்தவர்கள் தங்களது தாயகத்தைவிட்டு வெளியேறாமல் அங்கேயே நிலைத்திருக்க தான் பிரார்த்தனை செய்வதாகவும் போப் பதினான்காம் லியோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.