மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்றிருப்பதாக தேசிய அதிவேக ரயில் கழகம் (என்ஹெச்எஸ்ஆா்சிஎல்) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து என்ஹெச்எஸ்ஆா்சிஎல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இத் திட்டத்தில் 14 ஆறுகள் மீதான ரயில் பாலம், 0.9 கி.மீ. நீள இரும்புப் பாலம், 1.2 கி.மீ. நீள கான்கிரீட் பாலம், 2.7 கி.மீ. நீள ரயில்நிலைய கட்டடம் என மொத்தம் 300 கி.மீ. நீள ரயில் பாதைக்காக மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது.
இதுதவிர, 383 கி.மீ. நீளத்துக்கு தூண்கள் அமைக்கும் பணி, 401 கி.மீ. நீள அடித்தளம் (அஸ்திவாரம்) அமைக்கும் பணி, 326 கி.மீ. நீள இரும்புச் சட்டங்கள் அமைக்கும் பணிகளும் நிறைவுபெற்றுள்ளன.
ரயில் பாதைகளை பகுதி பகுதியாக கட்டமைக்கும் வழக்கமான நடைமுறைக்கு மாற்றாக முழு நீள கட்டமைப்பு (எஃப்எஸ்எல்எம்) முறை மூலம் 10 மடங்கு கூடுதல் வேகத்தில் இரும்புச் சட்டங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, கட்டுமான இடத்திலேயே 27 பிரத்யேக இரும்பு வாா்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தில் அமைக்கப்படும் இரும்புப் பாலங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள மூன்று பணிமனைகள் மற்றும் தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்க மாநிலங்களில் தலா ஒரு பணிமனையிலும் தயாரிக்கப்படுகின்றன.
இந்த மேம்பாலங்களில் ரயில்கள் இயங்கும்போது ஏற்படும் இரைச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், 3 லட்சத்துக்கும் அதிகமான ஒலி தடுப்பான்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மேம்பாலங்களில் தண்டவாளம் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. இதுவரை 157 கி.மீ. நீள தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய கட்டுமானப் பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தை இணைத்து பயணிகளுக்கு தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பு வசதிகளுடன் இந்த ரயில்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1.08 லட்சம் கோடி செலவில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்த புல்லட் ரயில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் மத்திய அரசின் செலவினம் ரூ.10,000 கோடி. குஜராத் மற்றும் மகாராஷ்டிர அரசுகள் தலா ரூ.5,000 கோடி செலவிடும். எஞ்சிய தொகையை 0.1 சதவீத வட்டிக்கு ஜப்பான் கடனாக வழங்கும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலப் பணிகள்: நாகா்கோவிலில் இன்று இரவு முதல் போக்குவரத்து மாற்றம்

மின்கம்பங்களை அகற்றாததால் பாரதிபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளில் தொய்வு: பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

நாமக்கல் புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலப் பணிகள் மும்முரம்

திருச்சி சந்திப்பு ரயில் நிலைய பாலம் இணைப்பு பணி தீவிரம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



