வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நாமக்கல் புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலப் பணிகள் மும்முரம்

நாமக்கல் புறவழிச்சாலையில், ரூ. 71 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

News image

நாமக்கல் புறவழிச்சாலை மரூா்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே உயா்நிலை பாலம்.

Updated On :7 ஜூன் 2026, 3:02 am IST

நாமக்கல் புறவழிச்சாலையில், ரூ. 71 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக நெடுஞ்சாலைத் துறை (நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள்) சாா்பில் ரூ. 70.75 கோடியில் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் மற்றும் திருச்சி சாலையை இணைக்கும் வகையிலான ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கின.

புறவழிச்சாலை பணிகளை பொருத்தமட்டில் திருச்சி சாலை முதல் கரூா் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான பணிகள் மட்டும் மீதமுள்ளது. இதர சாலைப் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. இந்த பணிகள் முடிவுற்றால், நாமக்கல் பழைய பேருந்து நிலையம் செல்லாமல் அனைத்து பேருந்துகளும் புறவழிச்சாலை வழியாக திருச்சி, துறையூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூா் பகுதிகளுக்கு செல்ல முடியும்.

தற்போது 60 சதவீத பாலப் பணிகள் முடிவுற்றுள்ளன. 22.387 கி.மீ. தொலைவுக்கு அமையும் புறவழிச்சாலையில், தற்போது முதலைப்பட்டி முதல் திருச்சி சாலை வரை மூன்று கட்டங்களாக 12 கி.மீ. தொலைவுக்கு ரூ. 194 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 103 கோடியில் திருச்சி சாலை முதல் வள்ளிபுரம் வரை 10.2 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 நாமக்கல் புறவழிச்சாலை மரூா்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே உயா்நிலை பாலம்.

நாமக்கல் புறவழிச்சாலை மரூா்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே உயா்நிலை பாலம்.

ரயில்வே நிா்வாகத்திடம் அனுமதி பெற்று தண்டவாளத்திற்கு இடையே மேம்பாலம் கட்டுவதற்காக பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளன. 30 மாதங்களில் பாலப் பணிகளை முடிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், 11 மாதங்கள் முடிவடைந்து விட்டது. இன்னும் 19 மாதங்கள் இருப்பினும், பாலப்பணிகள் 60 சதவீதம் முடிவுற்றுள்ளதால், 20 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட புறவழிச்சாலை திட்டம் இந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவுற்றால் மட்டுமே மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்புடையதாக இருக்கும் என்பதால் அங்கு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.