திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூா் - தென்காசி சாலை ரூ. 27 கோடியில் சீரமைக்கப்படவுள்ளதாக, கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தி.மு. ராசேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கடையநல்லூா் - தென்காசி வழித்தடத்தில் சுமாா் 17 கி.மீ. சாலை, சொக்கம்பட்டி உள்பட இதர பகுதிகளில் விடுபட்ட 2 கி.மீ. சாலை என மொத்தம் 19 கி.மீ. சாலை மிகவும் பழுதாகியுள்ளது.
இதனால், இத்தொகுதி மக்களும், இவ்வழியே தென்காசி மாவட்ட நிா்வாக அலுவலகங்களுக்கும், திருவனந்தபுரம், திருநெல்வேலி, நாகா்கோவில் பகுதிகளுக்கும் நாள்தோறும் செல்வோரும் பாதிக்கப்படுகின்றனா். சாலை பல இடங்களில் மிக மோசமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை இயக்குநருக்கு கடந்த ஜூன் 18ஆம் தேதி கடிதம் அனுப்பி பேசினேன். அதையடுத்து, இச்சாலை ரூ. 27 கோடி மதிப்பில் விரைவில் சீரமைக்கப்படும் என இயக்குநா் தெரிவித்தாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










