தில்லி சட்டப்பேரவையில் சாவர்க்கர், மாளவியா படங்கள்!

தில்லி சட்டப்பேரவையில் விரைவில் சாவர்க்கர், மாளவியா படங்கள் திறக்கப்படவுள்ளதைப் பற்றி...
தில்லி சட்டப்பேரவையில் மாளவியா, சாவர்க்கரின் படங்கள்...
தில்லி சட்டப்பேரவையில் மாளவியா, சாவர்க்கரின் படங்கள்...
Published on
Updated on
1 min read

தில்லி சட்டப்பேரவையில் விரைவில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் படம் திறக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவையில், சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா மற்றும் தயாநந்த் சரஸ்வதி ஆகியோரின் படங்கள் திறக்கப்பட வேண்டும் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் தலைமைக் கொறடாவுமான அபா வர்மா சபாநாயகரிடம் தனது முன்மொழிவை சமர்பித்தார்.

இந்நிலையில், இந்தப் புதிய முன்மொழிவு குறித்து நாளை (மே 21) நடைபெறும் சட்டப்பேரவை பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அபா வர்மா கூறுகையில், நாட்டின் கடந்த பொற்காலத்தை போற்றும் வகையிலும் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தேசத்தின் மீதான நமது பக்தியையும், நன்றியையும் வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி, சட்டப்பேரவையை ஒரு துடிப்பான வரலாற்று விழிப்புணர்வினால் ஊக்குவிக்கும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தில்லியின் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, சுமார் 27 ஆண்டுகள் கழித்து அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வெள்ளம், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com