வேகமெடுக்கும் கரோனா பரவல்? ஹரியாணாவில் புதியதாக 4 பேருக்கு பாதிப்பு!

ஹரியாணாவில் புதியதாக 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஹரியாணா மாநிலத்தில் புதியதாக 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

ஹரியாணாவின் குருகிராமம் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்றுபட்டுள்ளது உறுதியாகியதாக இன்று (மே 23) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2 ஆண்கள் மற்றும் 2 பெண்களுக்கு இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை ஓமிக்ரான் வகை கரோனா வைரஸ் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், அவர்கள் 4 நால்வரும் வெளிநாடுகள் எதற்கும் பயணம் செய்யதவர்கள் எனவும் ஏற்கனவே கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் என்பதும் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. மேலும், லேசான அறிகுறிகள் மட்டுமே அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் 4 பேரும் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்த்தி சிங் ராவ் கூறுகையில், மாநில சுகாதாரத் துறை இந்தப் பரவலை தீவிரமாகக் கவனித்து வருவதாகவும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:

”மக்கள் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை. இந்த வகை கரோனா வைரஸ் லேசான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்தும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துவது சுலபம். மேலும், இந்திய அரசு வெளியிட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் நாங்கள் தவறாமல் பின்பற்றி வருகிறோம். எனவே, குடிமக்கள் அனைவரும் கோவிட் நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஹரியாணாவிலுள்ள அனைத்து பொது மருத்துவர்களுக்கும், தேவையான அத்தியாவசிய மருந்துக்கள் மற்றும் மருத்துவ வசதிகள் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, குருகிராம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான ஒருவர் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் இந்தப் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கேரளம்: பலத்த காற்றுக்கு பறந்து சாலையில் விழுந்த பெரிய இரும்பு கூரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com