
4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குஜராத்தில் காடி, விசாவதர், கேரளத்தில் நிலம்பூர், பஞ்சாபில் லூதியானா மேற்கு மற்றும் மேற்கு வங்கத்தில் கலிகஞ்ச் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 5 பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 19 ஆம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், ஐந்து தொகுதிகளிலும் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.